அடாத்தாக கைப்பற்றப்பட்ட ‘பெற்ரிகலோ கெம்பஸ்’, ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ‘பெற்ரிகலோ கெம்பஸ்’ (Batticaloa campus) இன்று புதன்கிழமை (20) ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இன்று ராணுவம் வெளியேறியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (20) கெம்பஸை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரபு நாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்ட நிதியுதவியின் மூலம் இந்த பல்கலைக்கழகத்தை ஹிஸ்புல்லா நிர்மாணித்திருந்தார்.

ஆயினும் அங்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னராகவே, அது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிப்பதற்கான பல்கலைக்கழகம் எனும் போலிப் பிரசாரம் சில வருடங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பின்னர் கொரோனா தொற்றுக் காலத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கும் இடமாக இந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் அடாத்தாக கைப்பற்றிக் கொண்டது.

இந்தப் பின்னணியிலேயே தற்போது குறித்த பல்கலைக்கழகம் விடுவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here