அநுரகுமாரவைச் சந்தித்தார் ஜெய்சங்கர்

புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புதுடில்லியில் சந்தித்து இன்று பேச்சு நடத்தினார்.

கலாநிதி ஜெய்சங்கர் தனது ருவிற்றர் பதிவில், “எங்கள் இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இது ஒரு நல்ல விவாதம். இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசப்பட்டது ”என்றும் குறிப்பிட்டுள்ளார்.