அப்பாவுக்கு மகன் அனுப்பிய ஒரு கோடி ரூபாவை யாழ் பெண்ணிடம் இழந்த அப்பா உயிர் மாய்த்தார்!!

மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு கொடுத்து ஏமார்ந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு காட்டுமாறு கூறியுள்ளார்.

மகனின் பணத்தினை பெற்றவர் காணி வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் , எதிர்பார்த்த காணி கிடைக்காமையால் , காணி வாங்குவதனை பிற்போட்டுள்ளார்.

அந்நேரம் அவருக்கு அறிமுகமான பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளார். முதியவரும் நம்பிக்கை அடிப்படையில், மகனுக்கு தெரியாமல் பணத்தினை வழங்கியுள்ளார்.

பணத்தினை பெற்றுக்கொண்ட பெண் , பணத்தினை திருப்பி கொடுக்காதமையால் , முதியவர் ஏமார்ந்த நிலையில் , மகனும் காணியை வாங்குமாறு வற்புறுத்தி வந்த நிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான முதியவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!