அம்பாந்தோட்டை – வீரகெட்டிய, அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோதல் காரணமாக 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.