ஆசிரியர் ஒருவரின் விடுதியில் தோண்டப்பட்ட 35 அடி ஆழ குழி

மஸ்கெலியா விடுதியினுள் 35அடி ஆழத்தில் பாரிய மாணிக்கக்கல் குழி தோண்டப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, மௌசாகலை நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் விடுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் நால்வர் திங்கட்கிழமை(04) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விடயம் அம்பலமானது.

மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

ஆசிரியர் ஒருவரின் விடுதியில் தோண்டப்பட்ட 35 அடி ஆழ குழி - Lanka News - Tamilwin News ஆசிரியர் ஒருவரின் விடுதியில் தோண்டப்பட்ட 35 அடி ஆழ குழி - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here