“ஆமி எங்கள் சாமி” – கிளிநொச்சியில் சிலர் நடத்திய ‘கூத்து’!

தங்கள் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என்று கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் பிரதேச மக்களில் சிலர் இன்று (செப்ரெம்பர் 1) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி நகரப் பகுதியில் உள்ள 55ஆவது படைப்பிரிவின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தங்களுக்கு அனைத்து விடயங்களிலும் இராணுவத்தினரே ஒத்தாசையாக உள்ளனர் என்றும், குடிதண்ணீர் விநியோகம் முதல் மரண வீடு வரையில் அவர்களின் ஒத்தாசைகள் கிடைக்கின்றன என்றும் அந்தச் சிலர் தெரிவித்தனர்.

இதேபோன்றதொரு கூத்து அண்மையில் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலும் நடந்திருந்தது. அங்குள்ள 4ஆவது சிங்க றெஜிமென்ட் இராணுவ முகாமை அகற்றக்கூடாது என்று சிலர் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் இராணுவத்தினரே இருந்தனர் என்று அந்த ஊர் மக்களிடம் இருந்தே அறியமுடிந்தது.

கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கப்பட்டு சிலர் ஆர்ப்பாட்டத்தில் இறக்கிவிடப்பட்டனர் என்றும் அந்த ஊர் மக்கள் தெரிவித்திருந்தனர்.

“ஆமி எங்கள் சாமி” – கிளிநொச்சியில் சிலர் நடத்திய ‘கூத்து’! - Lanka News - Tamilwin News “ஆமி எங்கள் சாமி” – கிளிநொச்சியில் சிலர் நடத்திய ‘கூத்து’! - Lanka News - Tamilwin News “ஆமி எங்கள் சாமி” – கிளிநொச்சியில் சிலர் நடத்திய ‘கூத்து’! - Lanka News - Tamilwin News “ஆமி எங்கள் சாமி” – கிளிநொச்சியில் சிலர் நடத்திய ‘கூத்து’! - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  பாதுகாப்பு உத்தியோகத்தர் கடலில் சடலமாக மீட்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here