ஆற்றில் விழுந்த யுவதியை அள்ளி எடுத்த ஊர் மக்கள்

தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிகவும் ஆழமான இடத்தில் விழுந்த யுவதியொருவர் தலவாக்கலை பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரால் பெரும் போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தலவாக்கலை கூட்டுறவு தலைமை அலுவலகத்துக்கு அருகாமையில் மிகவும் ஆழமான இடத்தில் யுவதி வீழ்ந்துள்ளார். அவர் நீர்த்தேக்கத்தில் தத்தளித்ததைக் கண்ட மக்கள் எடுத்த உடனடி நடவடிக்கையால் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது.

ஒரு சிலர் நீர்த்தேக்கத்தில் குதித்து யுவதியை பிடித்தனர், நீர்த்தேக்கத்துக்கு மேலே நின்றிருந்தவர்கள் கயிறுகளை போட்டு, மிகவும் சிரமப்பட்டு கரைக்கு இழுத்தனர், பின்னர் அவர் சிகிச்சைக்காக லிந்துலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அக்கரபத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே மீட்கப்பட்டுள்ளார். வேலையெதுவும் இல்லையே என யோசித்துகொண்டே நீர்த்தேக்கத்தின் ஓரமாக சென்று கொண்டிருந்த போது, நீர்த்தேக்கத்துக்குள் தவறி விழுந்ததக யுவதி தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த இடத்தில் பாதுகாப்பு வேலி உள்ளது.

ஆற்றில் விழுந்த யுவதியை அள்ளி எடுத்த ஊர் மக்கள் - Lanka News - Tamilwin News

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை எனவும், யுவதியை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி அசேல சுரஞ்சித்ம ஹட தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.