ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபப் பெண் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
இன்று நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி (72 வயது) என்ற ஐந்து பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
