இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் யுவதி கொழும்பில் மர்ம மரணம்!!

கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் இங்கிலாந்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

பேஸ்புக் ஊடாக வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவருடன் அறிமுகமாகி பின்னர் இருவருக்கும் இடையில் காதல் உறவு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த பெண் இணையவழியில் முன்பதிவு செய்து அல்விஸ் மாவத்தையில் உள்ள குறித்த அடுக்குமாடி தொகுதியில் வீடொன்றை வாடகை அடிப்படையில் பெற்று கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வந்து தங்கியிருந்துள்ளார்.

அவர் நாளை (10) மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த நிலையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதில் சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவருடன் பேஸ்புக் ஊடாக உறவை பேணிய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் யுவதி கொழும்பில் மர்ம மரணம்!! - Lanka News - Tamilwin News இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் யுவதி கொழும்பில் மர்ம மரணம்!! - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here