இரத்தக்கறையுடன் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

பொலனறுவை- வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏறாவூர் பிரதான வீதியைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா இன்று அதிகாலை 3 மணிக்கு கடமை முடிந்து தனது அறைக்கு உறங்கச் சென்றவர் காலை 6 மணிக்கு ஜனாசாவாக மீட்கப்பட்டுள்ளார்.

நீதிபதியின் உத்தரவுக்கமைய தற்போது அவரது அறையிலிருந்து உடல் பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இரத்தக்கறையுடன் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் - Lanka News - Tamilwin News

கையில் ஒரு பெரிய காயம் காணப்படுவதாகவும், அறை முழுக்க இரத்தக்கறை காணப்படுவதுடன், அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது

உடலில் வேறு காயங்கள் இப்போதைக்கு இல்லை எனவும் அவருக்கு ஏற்பட்ட சுகவீனத்தால் இச்சம்பவம் ஏற்பட்டதா? அல்லது ஏதும் திட்டமிட்ட சதியா? என பொலிஸ் தடயவியல் பிரிவினர் துணையுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இடம்பெறும் பிரேத பரிசோதனையின் போதே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here