இரத்தினபுரி மாவட்டத்தில், கஹவத்தை பெருந்தோட்ட நிர்வாகத்துக்குட்பட்ட வெள்ளந்துர தோட்டத்தில் உள்ள மலையக தொழிலாளி ஒருவரின் தற்காலிக குடியிருப்பு, தோட்ட நிர்வாகத்தால் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
தோட்ட காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியிருப்பு எனக்கூறியே தோட்ட நிர்வாகத்தால் ஏவப்பட்ட கூலிப்படையால் இந்த கொடூர செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது என தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இல்ல, உரிய சட்ட நடவடிக்கையை பின்பற்றாமலேயே நிர்வாகம் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வன்மையாகக் கண்டித்துள்ளார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் கலந்துரையாடியுள்ளார்.
வீடு இல்லாததால் தமிழ் தம்பதியொன்றே அந்த குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்