இலவச எலக்ட்ரீசியன் கற்கை நெறி – விண்ணப்ப முடிவு திகதி 16/10/2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது களனி கேபிள்ஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இலவச எலக்ட்ரீசியன் கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு கற்கை முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படவிருக்கின்றது. பாடநெறி தமிழில் நடாத்தப்படும்.

எலக்றிசன்களுக்கு இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவில் மாத்திரம் எலக்றிசன்களுக்கு 20,000 வெற்றிடங்கள் தற்போது காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

casual job வகையில் மாத்திரம் 1000 இற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஒரு மணித்தியாலத்திற்கு ஆகக்குறைந்தது A$50 (Rs 10,000) ஊதியம் வழங்கப்படுகின்றது.

இலவச எலக்ட்ரீசியன் கற்கை நெறி- விண்ணப்ப முடிவு திகதி 16/10/2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
இலங்கை
பொறியியற்பீடம், அறிவியல்நகர், கிளிநொச்சி
களனி சக்தி மின்னிணைப்புத் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி

மின்னிணைப்புத் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறியினை களனி கேபிள்ஸின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியற்பீடம் தமிழ் மொழியில் நடாத்த திட்டமிட்டுள்ளது. இக்கற்கை நெறியின் பிரதான நோக்கம் மின்னிணைப்பு செயல்முறை தொடர்பான தத்துவ விளக்கங்களை வழங்குவது. எனவே மின்னியல் தொழில்நுட்ப துறையில் முன்னனுபவமுள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

: ஒரு வருடம் (பகுதிநேரம்: மாதத்தின் முதலாவது சனி, ஞாயிறு தினங்களில் மட்டும்) நேர்முகப்பரீட்சை மூலம்

: பொறியியற்பீடம், அறிவியல்நகர், கிளிநொச்சி
ஒருங்கிணைப்பாளர்,
“மின்னிணைப்பு தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி’
மின் மற்றும் மின்னணு பொறியியற்துறை,
பொறியியற்பீடம்,
அறிவியல்நகர்,
கிளிநொச்சி

மேற்படி கற்கைநெறியினை பயில்வதற்காக பொருத்தமான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 16-10-2023 வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

பொருத்தமான விண்ணப்பதாரிகள் தங்களது சுயவிபரக்கோவையினை கீழுள்ள முகவரிக்கு விண்ணப்ப முடிவு திகதியன்றோ அதற்கு முன்னதாகவோ கிடைக்கக்கூடியதாக பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கவேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்கவும் முடியும் (சுயவிபரக்கோவையில் மின்னிணைப்பு துறையில் தொழில் செய்த சேவைக்காலம், சேவை விபரம் என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்).

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “மின்னிணைப்பு தகைமைச்சான்றிதழ் கற்கைநெறி’ எனக்குறிப்பிடுதல் வேண்டும். தெளிவற்ற மற்றும் விண்ணப்ப முடிவு திகதிக்கு பின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பதிவாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here