இளம் நீச்சல் வீராங்கனையின் நிர்வாண படங்களை வெளியிட்ட முன்னாள் காதலனுக்கு பிணை!

இலங்கையின் பிரபல நீச்சல் வீராங்கனை ஒருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வர்த்தகரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (5) உத்தரவிட்டுள்ளார்.

அவர் ரூ.500,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீச்சல் வீராங்கனையுடன் மூன்று மாதங்களாக காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படும் இந்த சந்தேக நபர், கோட்டையிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட நிர்வாணப் புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் காதலனின் நண்பர்கள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நாளை மறுதினம் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்ததுடன், சந்தேக நபரை 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here