இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் தற்போது உக்கிரமடைந்துள்ள நிலையில் குறித்த யுத்தத்தில் படுகாயமடைந்திருந்த இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார்.
போரின் போது காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த அனுலா ஜயதிலக்க என்ற இலங்கைப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இஸ்ரேலில் உயிரிழந்த குறித்த பெண் அங்குள்ள வயதான பார்வையற்ற பெண்ணை பராமரித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அனுலா ஜயதிலக்க சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பணியாற்றிய இடத்தின் உரிமையாளர்கள் முகநூலில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
அனுலா எனது மறைந்த அத்தை அலிசாவின் பராமரிப்பாளராக இருந்தார்.
அர்ப்பணிப்பு மற்றும் அன்பான இதயத்துடன், வீட்டில் உள்ள பூனைகளையும், அநேகமாக பறவைகள் மற்றும் பிற உயிரினங்களையும் கவனித்துக்கொண்டுள்ளார்.
என் அத்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் கிப்புட்ஸ் பீரியில் தொடர்ந்து வசித்து வந்தார்.
இந்நிலையில் 2 நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்