உல்லாசம் அனுபவிக்க சென்ற 1 பிள்ளையின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

பெண்ணொருவருடன் கொஹூவலை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மாவத்தையில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த திடீரென சுகவீனமுற்ற நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஒரு பிள்ளை தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தங்கும் விடுதி அறையின் மேசையில் காணப்பட்ட சில மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உயிரிழந்த நபர் சட்ட ரீதியான மனைவியிடம் இருந்து பிரிய விவாகரத்து பெற விண்ணப்பித்துள்ளவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பி ஒருவர் மூலம் கணவனை பிரிய விவகாரத்து கோரியிருந்த 33 வயதான பெண்ணொருவருடன் உயிரிழந்த நபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று மதியம் கொஹூவலையில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர்.

இவரும் இரவு நித்திரைக்கு சென்ற பின்னர், இன்று அதிகாலை நபருக்கு குமட்டல் ஏற்பட்டுள்ளதுடன் பெண் அவரது முதுகை தட்டி முதலுதவி சிகிச்சை வழங்கியுள்ளார்.

எனினும் சிறிது நேரத்தின் பின்ன வாயில் இருந்து சளி வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து பெண் சத்தமிட்டு உதவி கேட்டுள்ளார்.

விடுதியின் ஊழியர்கள் மற்றும் அயல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் அங்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து 1990 அம்பியூலன்ஸ் வண்டியின் சுகாதார ஊழியர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் வந்து பரிசோதித்த போது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நுகேகொடை பதில் நீதவான் சுனேத்ரா நாணயக்கார சென்று ஆரம்ப நீதவான் விசாரணைகளை நடத்தியுள்ளார்

மேலும் அறிய  கடலில் செல்பி எடுத்த மாணவர்களில் 2 மாணவர்களை அள்ளி சென்ற அலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here