ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

வவுனியா, ஓமந்தை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செய்தி அறிக்கையிடலின் போது ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறை விளைவித்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இன்று (20.09) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, ஓமந்தை, சின்ன விளாத்திக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அருகில் கற்குவாரி அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஓமந்தை கமநல அபிவிருத்தி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, குறித்த பகுதியில் ஊடகவியலாளர்கள் செய்தி அறிகையிடலில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயற்பட்ட போது அதனை ஊடகவியலாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளரின் வீடியோ பதிவு செய்த தொலைபேசியை தட்டி குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தி தாக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து அங்கு நின்ற ஏனைய ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் பொலிஸ் அதிகாரியுடன் முரண்பட்டதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் வவுனியா ஊடக அமையம் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - Lanka News - Tamilwin News ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - Lanka News - Tamilwin News ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - Lanka News - Tamilwin News ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here