திருமுருகண்டிக்கும் இரணைமடு சந்திக்கும் இடையில் உள்ள ஏ9 வீதியில் 25.08.2023 இன்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தியுடன் முருகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாட்டுக்கு இடம் கொடுத்து செல்ல முற்பட்ட வேளை வீதியை கடக்க முற்பட்ட மாட்டுக்கு இடம் கொடுத்து செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
https://tamiliz.com/tummy-time-baby-mirror-infant-toys-newborn-toys-0-3-months-brain-development-with-crinkle-cloth-book-and-teether-black-and-white-high-contrast-baby-toys-4-6-9-12-month-boys-girls-crawling-sensory-toy/