ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் சடலமாக மீட்பு!

வாவியொன்றில் மிதந்துகொண்டிருந்த யுவதியொருவரின் சடலம் இன்று (23) கண்டுப்பிடிக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸாா் தெரிவித்துள்ளனா். அவருடன் இருந்த குழந்தை தொடர்பில் தேடல்கள் நடத்தப்படுகின்றன.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி (26 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் தனக்கும் தனது குழந்தைக்கும் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து உயிரிழந்த மகாமணி தயானி மூன்று பக்க கடிதமொன்றையும் எழுதியுள்ளதாகவும் அந்த கடித்துடன் அவரின் திருமண சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன வாவிக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் சடலமாக மீட்பு! - Lanka News - Tamilwin News

குறித்த பெண், தனது குழந்தையுடன் லிந்துல, லோகி தோட்டத்திலுள்ள அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள வாவியில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார தெரிவித்தாா்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் நீரில் மிதந்துக்கொண்டிருந்ததாகவும் குழந்தை காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.

குழந்தையும் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது

ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் சடலமாக மீட்பு! - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  பாடசாலை விளையாட்டு போட்டியில் 76 மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here