ஒரு இலட்சம் ரூபா போலி காசு அச்சிட்டவர்கள் 12,000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் கைது!

திருகோணாமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 ஆயிரம் ரூபா போலி நாணயத்தால்களுடன் இருவர் (05) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இப்போலி நாணயத்தாளை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்ய முயற்சிக்கும் போது பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலி நாணயத்தாளை கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் கிண்ணியா உதவிப் பொலிஸ் அதிகாரி ராஜித குருசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து இப்போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட அச்சகத்தினை சேர்ந்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஒரு இலட்சம் ரூபா போலி காசு அச்சிட்டவர்கள் 12,000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் கைது! - Lanka News - Tamilwin News

இருவரும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை அச்சிடப்பட்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கிண்ணியா பெரியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்கள் எனவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

குறித்த நபர்களிடமிருந்து 12,000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணினி மற்றும் அச்சு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இருவரையும் கிண்ணியா சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலையப் பொருப்பதிகாரி WHCK பெர்னான்டோ குறிப்பிட்டார்.

இவ்வாறு போலியாக அச்சிடப்பட்ட 88 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் கிண்ணியாவில் புழக்கத்தில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் அவ்வாறான போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயல்படுமாறும் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.