ஓட்டமாவடியில் விபத்து; 12 வயது சிறுமி பலி , தந்தை படுகாயம்

ஓட்டமாவடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (8) காலை 9 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடியில் விபத்து; 12 வயது சிறுமி பலி , தந்தை படுகாயம் - Lanka News - Tamilwin News

காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய அப்துல் கபூர் முகம்மட் கலீல் என்பவர் தனது 12 வயதுடைய மகளை மோட்டார் சைக்கிளில் மாவடிவெம்பு நோக்கி ஏற்றிச் செல்லும் போது பொலன்னறுவை பகுதியில் இருந்து வந்த பஸ் வண்டி தந்தை, மகள் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த சிறுமி காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் பாத்திமா றியா எனும் மாணவியாவார்.

ஓட்டமாவடியில் விபத்து; 12 வயது சிறுமி பலி , தந்தை படுகாயம் - Lanka News - Tamilwin News

இந்த விபத்துச் சம்பவத்தில், படுகாயமடைந்த தந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ஓட்டமாவடியில் விபத்து; 12 வயது சிறுமி பலி , தந்தை படுகாயம் - Lanka News - Tamilwin News ஓட்டமாவடியில் விபத்து; 12 வயது சிறுமி பலி , தந்தை படுகாயம் - Lanka News - Tamilwin News ஓட்டமாவடியில் விபத்து; 12 வயது சிறுமி பலி , தந்தை படுகாயம் - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here