கசிப்பு வேட்டைக்கு போய் காணாமல் போன பொலீசார் சடலமாக மீட்ப்பு

கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற போது, நேற்று (14) இவர் காணாமல் போயிருந்தார்.

கசிப்பு காய்ச்சும் தகவலறிந்து 3 பொலிசார் சென்றபோது, கசிப்பு காய்ச்சுபவர்கள் தப்பியோடினர். அவர்கள் குளத்துக்குள் இறங்கி தப்பியோட, பொலிஸ் உத்தியோகத்தர்களும் விரட்டிச் சென்றனர்.

கசிப்பு வேட்டைக்கு போய் காணாமல் போன பொலீசார் சடலமாக மீட்ப்பு - Lanka News - Tamilwin News

சிறிது நேரத்தின் பின் 2 பொலிசார் திரும்பி வந்தபோதும், ஒருவர் திரும்பி வரவில்லை.

நேற்று இரவு வரை இராணுவம், பொலிசார் அந்த பகுதியில் பெரும் தேடுதலில் ஈடுபட்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று தேடுதல் நடத்தப்பட்டது. இதில் நீரில் மூழ்கிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டது.

கசிப்பு வேட்டைக்கு போய் காணாமல் போன பொலீசார் சடலமாக மீட்ப்பு - Lanka News - Tamilwin News

இதையடுத்து, செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது.

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

சட்டவிரோத கசிப்பு பிடிக்கச் சென்ற பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாயம்!! கிளிநொச்சியில் பரபரப்பு!

 

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here