கடிதம் எழுதியபின் ரயிலில் பாய்ந்த இளம் பெண் மருத்துவர்!!

புத்தளம், பட்டுலு ஓய பிரதேசத்தில் பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இளம் வைத்தியர் ஒருவரே ரயிலில் மோதுண்டு தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.

அவர் இறப்பதற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் “அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. நான் இங்கிருந்து செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளம் பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.