கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது

சட்ட விரோதமாக கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப் பெண் அனுராதபுரம் – யாழ்ப்பாண சந்திப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அனுராதபுரம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண் அனுராதபுரத்தில் சேவையாற்றும் பிரபலமான மருத்துவர் ஒருவரிடம் பணிபுரிந்து வருபவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதான பெண்ணிடம் 7 கருத்தடை மாத்திரைகளை 35 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்பவரை போன்று ஒருவரை அதிரடிப்படையினர் அனுப்பியுள்ளபோதே அப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (1) முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் பெண்ணை எச்சரித்ததுடன் 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here