கற்பூரத்தால் நேர்ந்த விபரீதம்!! 6 பேர் கவலைக்கிடம்.. 16பேர் வைத்தியாசலையில்

கொழும்பு புறக்கோட்டை 2 ம்குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (27) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், திடீரென ஏற்பட்ட தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் காயமடைந்த நிலையில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்கு தெருவில் உள்ள 8 மாடி கட்டடிமொன்றில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து 7 தீயனைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ விபத்தில் பல வர்த்தக நிலையங்கள் சேததடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் காலை சமய வழிபாட்டின் போது ஏற்றப்பட்டடிருந்த கற்பூரத்தின் ஊடாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here