(Lankasri)யாழ்ப்பாணம் கல்வியன்காட்டில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
கல்வியன்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் நபரின் சடலம் மீட்கப்பட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் மனைவி சாமத்திய வீட்டிற்கு சென்ற போது குறித்த நபர் தனியாக வீட்டில் இருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் இவர்களது வீட்டிற்கு சென்றபோது உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை பார்த்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுகின்றமையினால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.
சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. சடலத்திற்கு அருகில் சாப்பிட்ட உணவு மீதி காணப்படுகிறது.
உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகில் இருக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவரே பிரதான சந்தேகநபராக இனம்காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர், தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு சென்று வருவதாகவும், மதுபோதையில் அந்த வீட்டு பெண்ணின் மகளின் கையை நேற்று பிடித்து இழுத்ததாக, தகப்பன் அறிந்து, நண்பர்கள் சிலருடன் வீடு புகுந்து அடித்துக் கொலை செய்தனரா எனும் கோணத்திலும் விசாரணை இடம்பெறுகிறது.
சந்தேகநபரை பொலிசார் அடையாளம் கண்ட போதிலும் தலைமறைவாகியுள்ளமையால், கைது செய்யும் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
Lankasri கல்வியன்காட்டு நிருபர்