கல்வியன்காட்டு மகேந்திரன் ஏன் அடித்து கொலை செய்யப்பட்டார் – விபரம் உள்ளே | Tamilwin Online – தமிழ்வின் ஒன்லைன் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online

(Tamilwin) யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள வீட்டில் நிர்வாண நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

தனது மகளுக்கு பாலியல்   சீண்டல் செய்தமையினால் ஆட்டோ சாரதியான மகேந்திரனை தாக்கியதாகவும் எனினும் அவரை கொலை செய்யவில்லை எனவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கோப்பாய் பொலிசாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒன்பது வயது சிறுமியொருவரை ஆட்டோவில் பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்தநபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக, தனது தாயாருக்கு சிறுமி தெரிவித்த நிலையில் தாயார் கொலை செய்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனையில் சிறுமி துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை சட்டவைத்திய அதிகாரியினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொலை இடம்பெற்ற அன்று சிறுமியின் தாயாரும் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். அடுத்தநாள் மேலும் நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ஆறு பேரையும்  எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.

-Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here