காணாமல்போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிப்பு!

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டம், எமில்டன் பிரிவில் இருந்து காணாமல்போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று நல்லத்தண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரக்காடு கிராமத்தில் இன்று மாலை 7 மணிக்கு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளனர். அதன்பின்னர் பெற்றோர்களிடம் கையளிக்கப்படுவார்கள்.

பாடசாலை மாணவர்கள் மூவர் நேற்று (26) முதல் காணாமல் போயுள்ளனர் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடராஜா நிலூக்‌ஷன் – வயது 15, யோகராஜன் திவாகர் – வயது 13, ராஜா சன்தூர் – வயது 14 ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல்போயிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இங்கினர். இந்நிலையில் மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here