காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம்!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஒரு கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட அவலம் ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனைா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்ட கனிலா வினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

கனிலா செலுத்தும்போது கை நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதனால் கைக்கு இரத்த ஓட்டம் செல்ல முடியாமல் கை செயலிழந்துள்ளது. இதன் காரணமாகவே கையை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்கும் மல்லாகத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கே இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இரவு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக குறித்த சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுநாள் சிறுமிக்கு கனூலா போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆகஸ்ட் 27 ஆம் திகதி தனக்கு கையில் கடும் வலி ஏற்பட்டுள்ளதாக சிறுமி முறையிட்டுள்ளார். அடுத்தநாள் கை வீக்கமடைந்ததையடுத்து கனூலா அகற்றப்பட்டுள்ளது.

பின் சோதனை செய்ததில் கையிற்கு இரத்த ஓட்டம் இல்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சத்திர சிகிச்சை கூடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த பயனும் இல்லாத காரணத்தால் சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

சிறுமி இதற்கு முன் தனியார் வைத்தியசாலையில் நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளதோடு அந்த தனியார் வைத்தியசாலையின் உள்ள வைத்தியர் ஒருவரின் ஆலோசனைக்கேற்ப இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம்இது வைத்தியசாலை தவறால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகளை மேற்கொள்ள இரு வைத்திய நிபுணர்கள் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்கும் மல்லாகத்தைச் சேர்ந்த சிறுமி 25 ஆம் இரவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு 26 ஆம் திகதி கனூலா போடப்பட்டுள்ளது. 27 ஆம் திகதி 3 நேர மருத்து ஏற்றப்பட்டுள்ளது. 27 ஆம் திகதி இரவு பிள்ளை முறையிட்டுள்ளதோடு தாயாரும் முறையிட்டுள்ளார். 28 ஆம் திகதி காலை கனூலா கழட்டப்பட்டுள்ளது. அப்போதே கை வீக்கம் காணப்பட்டுள்ளது.

கையிற்கு குருதி ஓட்டம் இல்லை எனக் கண்டுபிடித்து மாலை சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எடுத்து சிகிச்சைக்கு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 2 ஆம் திகதி இடது கை மணிக் கட்டுடன் அகற்றும் அவலம் ஏற்பட்டு விட்டது.

காச்சல் காரணமாக திருநெல்வேலி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறிய வைத்தியரின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய போதனா வைத்தியசாலையின் 12ஆம் இலக்க விடுதியில் அனுமதித்துள்ளனர். தனியார் வைத்தியசாலையில் இருந்து பின்பு போதனா வைத்தியசாலையில் பொருத்திய ஊசியின் கையே அகற்றப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நேற்றைய தினம் இரு வைத்திய நிபுணர்கள் தலைமையில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணைக்காக வைத்திய நிபுணர்களாக பிறேமகிருஸ்ணா மற்றும் அருள்மொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதோடு மத்திய சுகாதார அமைச்சிற்கும் முறையிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருப்பினும் கனுலா ஊடாக ஊசி மருந்து செலுத்த முதல் கனுலா சரியாக உள்ளதா / வீக்கம் ஏற்படுகின்றதா / நோயாளி நோவினை உணருகின்றாரா / கனுலா போடப்பட்ட திகதி / போட்டுள்ள இடம் என்பவற்றை ஒவ்வொரு முறையும் மருந்து செலுத்தும் தாதி கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது முறை.

கை வீங்கி இருப்பது தெரிந்தும் உடனடியாக கைக்கு ஒக்கிசன் கிடைக்கின்றதா என (spo2) பரிசோதித்து பார்த்திருந்தால் இன்று அக் குழந்தை கையுடன் இருந்திருக்கும்.

யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here