கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: வெளியான அதிர்ச்சி காணொளி

இலங்கையில் பிரபல சுப்பர் மார்க்கெட்டான கார்கில்ஸில் இளம் பெண் ஒருவர் அந்த ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹன்வெல்ல கிளையில் பணியாற்றும் பெண்கள் மற்றும் ஆண்களால் பெண் வாடிக்கையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பெண் ஹேலிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி என்று தெரிவிக்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் குறித்த இடத்தை உறுதிப்படுத்தி சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான திருட்டுக்கு பதிலளிக்கும் வகையில், விற்பனை நிலையத்தின் பல ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து கார்கில்ஸ் வெளியிட்ட அறிக்கையில், சுப்பர் மார்க்கெட்டில் திருட்டு தொடர்பான எங்கள் விற்பனை நிலையத்தில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம்.

இந்த நடத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கார்கில்ஸ் நிறுவனத்தின் செயல்முறையுடன் இவ்வாறான செயல் ஒரு போதும் ஒத்துப்போகவில்லை என்பதால், குறிப்பிட்ட ஊழியர்களின் நடத்தை குறித்து நாங்கள் அதிர்ச்சியும் வெட்கமும் அடைகிறோம்.

தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநிறுத்திவிட்டு விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

கார்கில்ஸ் மீதான எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.

தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பு தொடரும். உங்கள் புரிதலுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: வெளியான அதிர்ச்சி காணொளி - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here