காலக்கொடுமை!! 15 வயது சிறுவனால் 8வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

புத்தளத்தில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுவனை சிலாபம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here