கிளிநொச்சி மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் தாரணி சூப்பர் மார்க்கெட் நிதி அனுசரணையில் நடாத்திய மாபெரும் அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் வட்டக்கச்சி மண்ணின் இரு அணிகள் பலப்பரீட்சை நடாத்தியது.
லக்கி ஸ்டார் அணி மற்றும் இளந்தளிர் அணிகள் மோதிய போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகள் சம பலம் பொருந்திய விளையாட்டை வெளிப்படுத்தினர்.
பின்னர் லக்கி ஸ்டார் அணியின் இளம் வீரன் அபிராம் போட்டியின் போக்கினை மாற்றி சிறப்பாக பந்துகளை பரிமாற்றம் செய்து அணிக்கு முதல் கோலினை போட்டு போட்டியை லக்கி அணி பக்கம் கொண்டு சென்றான்.
தொடர்ந்து விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டியின் இறுதியில் 3:0 அடிப்படையில் லக்கி ஸ்டார் அணி சம்பியன் ஆனது.
இப் போட்டியில் மிகவும் சிறப்பான விடயம் என்னவெனில் இரு அணிகளும் தமது பணப்பரிசை தமது கல்வித்தாய் வட்டக்கச்சி மத்திய கல்லூரிக்கு (பாடசாலை உதைபந்தாட்ட அணிக்கு)அன்பளிப்பு செய்தனர்.
இந்த தொடரை சிறப்பாக நடாத்திய கிளிநொச்சி மாவட்ட கால்பந்தாட்ட புதிய நிர்வாகம் மற்றும் அனைத்து கழக வீரர்கள் மற்றும் நடுவர்கள் மற்றும் நிதி உதவி செய்த தாரணி சூப்பர்மார்க்கெட் அனைவருக்கும் உதைபந்தாட்ட ரசிகர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.