அநுராதபுரம், மிஹிந்தலை சீப்புக்குளம் பகுதியில் விவசாய கிணற்றொன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் 23 வயதையுடைய கிரிமெட்டியாவ – சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
உயிரிழந்த யுவதியின் சகோதரி மாடுகளைப் பார்ப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்த பின்னர் வீட்டில் மூத்த சகோதரி இல்லாததால் சுற்றிலும் தேடியபோது கிணற்றுக்குள் சடலமாக மிதந்ததைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.