கிளிநொச்சியில் காருடன் மோதி விபத்துக்குள்ளான ஆசிரியை மரணம்

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சனி எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு கிளிநொச்சியிலிருந்து கணவருடன் மோட்டார் வண்டடியில் வட்டக்கச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் காருடன் மோதி விபத்துக்குள்ளான ஆசிரியை மரணம்

கிளிநொச்சி நகர் ஏ-9 வீதியில் காக்கா கடைச் சந்தியில் வட்டக்கச்சிக்கு திரும்பும் போது எதிர்பக்கம் வந்த காருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளாகிய ஆசிரியர் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் பங்கையற்ச்செல்வனின் சகோதரி என்றும் வட்டகச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.

விபத்தின் போது படுகாயமடைந்த ஆசிரியர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here