கிளிநொச்சியில் பயங்கரம்!! இளம் தந்தை அடித்துக் கொலை..!

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் இளம் தந்தை ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்த்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் பயங்கரம்!! இளம் தந்தை அடித்துக் கொலை..!
கிளிநொச்சியில் பயங்கரம்!! இளம் தந்தை அடித்துக் கொலை..!

வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார்.

சற்று நேரத்தில் சத்தம் கேட்டது. அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர். இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணைக்கு சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் பயங்கரம்!! இளம் தந்தை அடித்துக் கொலை..!
கிளிநொச்சியில் பயங்கரம்!! இளம் தந்தை அடித்துக் கொலை..!

அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் குற்றத்தடுப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Fb Img 1698302556201 Fb Img 1698302553499

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here