கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் தேனுஜன் தற்கொலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார்.

சந்திரமோகன் தேனுஜன் (22) என்ற மாணவனே உயிரிழந்தார். கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றவர் இவர். மொரட்டுவ பல்கலைகழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி பயில சென்றிருந்தார்.

எனினும், இந்த வருடத்தில் தன்னால் கல்வியை தொடர சிரமமாக இருப்பதாக குறிப்பிட்டு, அடுத்த வருடத்திலிருந்து பல்கலைகழக கல்வியை தொடர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மனஅழுத்தத்திற்கான மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் தேனுஜன் தற்கொலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here