கிழக்கில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணி தாய்மாருக்கு உறுதுணையாக இருந்த டாக்டர் தங்கவடிவேல் காலமானார்

கிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்திய நிபுணர் என்ற பெருமையினைக் கொண்ட டாக்டர் சீ.தங்கவடிவேல் அவர்கள் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை தாரகமந்திரமாக கொண்டு தனது வாழ்நாளை வைத்திய சேவைக்கே அர்ப்பணித்த ஒருவராக கிழக்கு மக்களால் இவர் நோக்கப்படுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறை சேர்ந்த இவர் இலங்கையின் பல பாகங்களிலும் கடமையாற்றிய போதிலும் தனது பெருமளவான காலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணராகவே கடமையாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களினால் நேசிக்கப்பட்ட ஒருவராகவும் யுத்த காலத்தில் மிகவும் அர்ப்பணிப்புமிக்க சேவையினையும் செய்து ஓய்வுபெற்ற டாக்டர் தங்கவடிவேல் அவர்கள் தனது 84வயதில் நேற்று காலமானார்.

பெரியகல்லாறு பிரதான வீதியில் உள்ள அவரது இல்லத்தில் உடலம் வைக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக இன்று மாலை பெரியகல்லாறு உறவினர்கள் உறங்கும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது உடலத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்

 

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here