குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை ! கோட்டைக்கல்லாற்றில் சம்பவம்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் நேற்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுதர்சன்கபே வீதி கோட்டைக்கல்லாற்ரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடை சுப்பிரமணியம்-முத்துலிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் சத்திரசிச்சை ஒன்றுக்கு உட்படுத்தவிருந்ததாகவும் சம்ப தினத்திற்கு முதல் நாள் உணவருந்தி விட்டு வீட்டில் இருந்ததாகவும் சம்பவதினத்தன்று அயலில் உள்ள மேல்மாடி கட்டிடத்தில் தூக்கிட்டு காணப்பட்டிருந்ததனை கண்ட அயல் வீட்டார் சம்பவத்தை உறவினர்களிடம் தெரிவித்ததனையடுத்து உறவினர்கள் தூக்கில் இருந்து மீட்டெடுத்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.