கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரின் கையை வெட்டி எடுத்துச் சென்ற சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது கைகளை வெட்டிவிட்டு, அந்தக் கைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபர் இன்று (25.03.23) நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சந்தேகநபரை 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் தமது சட்டத்தரணியின் ஊடாக இன்று முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் குறித்த நபரின் கையை வெட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரின் கைகள் மணிக்கட்டு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்ததோடு, அதனை அவர் கொண்டுச்சென்றிருந்தார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

சந்தேகநபர் இதற்கு முன்னரும் ஒருவரின் கையை வெட்டியிருந்ததோடு, அவரது கையை வைத்தியர்கள் ஒன்றுசேர்த்திருந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறு வெட்டப்பட்ட கையை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.