வீடொன்றில் கொள்ளையிட வந்த நபர் ஒருவரை வீட்டில் இருந்த கணவன்-மனைவி தாக்கி வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் ஒன்று ஹோமாகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
ஹோமாகம, பிடிபன குவர்தன மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையன் ஒருவன் கூர்மையான ஆயுதத்துடன் வீட்டிற்குள் நுழைந்து முதலில் வீட்டின் உரிமையாளரை அச்சுறுத்தி கொள்ளையடிக்க முயற்சித்துள்ளான்,
அடுத்து வீட்டின் உரிமையாளரின் மனைவியின் அருகில் சென்ற கொள்ளையன், கத்தியை அவரின் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளான்.
அப்போது, பெண்ணின் தள்ளுமுள்ளு காரணமாக தவறி விழுந்த கொள்ளையன், திடீரென மீண்டும் குதித்து அவர்களின் மகளை பிடிக்க முயன்றுள்ளான்,
அங்கு ஏற்பட்ட கைகலப்பில் கொள்ளையனிடம் இருந்த கூரிய ஆயுதத்தை வீட்டின் உரிமையாளர் பறித்துள்ளார்.
பின்னர், வீட்டின் உரிமையாளர் அதே ஆயுதத்தால் கொள்ளையனை தாக்கியதில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான கொள்ளையன் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.