கோட்டாவை விரட்டிய போது ஜனாதிபதி மாளிகையில் பியானோ இசைத்த பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், எதிர்ப்பாளர்களை பியானோ இசைத்து மகிழ்வித்த அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த எதிர்ப்பாளர்களால், ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட நாளில் பாதுகாப்பிற்காக கான்ஸ்டபிள் தயாரத்ன நியமிக்கப்பட்டார்.

இதன்போது ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருந்த பியானோவில் அமர்ந்து, அதன் அறைகள் வழியாக சென்றுகொண்டிருந்த மக்களுக்கு பாடலை இசைத்திருந்தார்.

‘கட்டிடத்தை சேதப்படுத்தும் போது தயாரத்ன பியானோ வாசித்துக் கொண்டிருந்தார்’ என்று பெயர் வெளியிடாத ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கான்ஸ்டபிள் ஒழுக்கத்தை மீறியதாக பொலிஸ் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

ஜூலை 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி மாளிகை தாக்கப்படுவதற்கு முன்பு, கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி பல மாதங்களாக எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே முகாமிட்டிருந்தனர்.

எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர், பின்னர் அங்கிருந்த நீர் தடாகத்தில் உல்லாசமாக இருப்பதையும், ராஜபக்சவின் படுக்கையில் அறையில் மகிழ்ச்சியாக இருந்தமையையும் காண முடிந்தது.

உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தி ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை துரிதப்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டது.

மக்கள் எழுச்சி பேராட்டத்தை தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறியதுடன், சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடித்தை வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும், சில மாதங்களின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியிருந்தார். இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மாளிகையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை திருப்பி கொடுத்தவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here