HomeAccident Newsகோர விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையிலுள்ள இளம் கர்ப்பிணி தாதி! அதிக குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய...

கோர விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையிலுள்ள இளம் கர்ப்பிணி தாதி! அதிக குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது

புத்தளத்தில் அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த கர்ப்பிணிப் பெண் தாதி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய தாதி ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பணி நிமித்தமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.

மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த அவந்தி கருணாரத்ன என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாவார். அவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை, ஆனால் உள் இரத்தப்போக்கு காரணமாக ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி அதிக குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments