சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக செவ்வாய்க்கிழமை(03) முன்னெடுத்தனர்.

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னணியில் அதற்காக போராடிய சட்டத்தரணிகளின் போராட்டத்திலும் பொலிஸார், புலனாய்வாளர்கள் வெளிப்படையாகவே அவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்கள் , வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார் - Lanka News - Tamilwin News சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார் - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here