திருகோணமலை – இலுப்பை குளம் பொரலுகந்த ரஜமஹா விகாரை நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடை விதித்திருந்த போதிலும் குறித்த கட்டுமான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முறையான அனுமதிகளை பெறாமல் அந்த சூழலில் வசிக்கும் மக்களின் கடுமையான எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் இவ் விகாரை சட்ட விரோதமாக கட்டப்படுவதை எதிர்த்து பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவில்லை.
அதனால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாது இனங்களுக்கு இடையில் பதற்றம் ஏற்படாது.
ஆனால் ஒரு சட்ட விரோத கட்டுமானத்தை நிறுத்துமாறு கோரி பொது மக்கள் சட்டத்தினை மீறாமல் எதிர்ப்பினை பதிவு செய்வதனால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என்று கருதி இன்று பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிரான பேரணிக்கு நீதிமன்ற இல் தடை உத்தரவு வாங்கியுள்ளனர் பொலிஸார்.
ஆகவே பொதுமக்கள் எதிர்ப்பினை பதிவு செய்யும் சுதந்திரம் சட்ட ரீதியாக மறுக்கப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத விகாரை கட்டுமானம் தொடரவுள்ளது.
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குரலாகவே அரச திணைக்களங்கள் செயற்படும் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது.