சம்பத் வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு

வவுனியா ஊற்றுக்குளம் சிங்கள குடியேற்றத்தில் உருவாகி வரும் சபுமல்கஸ்கட விகாரைக்கு (Sapumalgaskada Pabbatarama vihara) சம்பத் வங்கியின் (Sampath Bank) பௌத்த சங்கம் நன்கொடை வழங்கி இருக்கிறது

வடக்கு கிழக்கில் 30 கிளைகளுடன் தமிழ் சமூக வைப்புகளை இலக்கு வைத்து இயங்கும் சம்பத் வங்கி குறித்த பகுதி தமிழ் மக்களுக்கு எதிரான வவுனியா சிங்கள குடியேற்றத்தின் பிரதான தளங்களில் ஒன்றாக உருவாகும் விகாரையின் கட்டுமானங்களுக்கு பங்களிக்கின்றது

மேற்படி வவுனியா வடக்கு ஆக்கிரமிப்புகள் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று சிங்கள குடியேற்றங்கள் வரை விரியும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு வருகின்றன

இதன் மூலம் தமிழ் சமூகத்தின் நில தொடர்ச்சியை சிதைத்து வவுனியாவிலிருந்து கொக்கிளாய் முகத்துவாரம் வரையில் தனியான நிர்வாக அலகு கொண்ட சிங்கள குடியேற்றத்தை உருவாக்க முயலுகின்றார்கள்

இந்த நிலையில் தமிழ் மக்களின் சேமிப்புகளை வைப்புகளாக பெற்று அதனூடாக தமிழ் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு துணை செய்வதை சமூக பொறுப்பாக (CSR) எந்தவகையிலும் அடையாளப்படுத்த முடியாது

சமூகப் பொறுப்பு (CSR) என்பது எல்லா தரப்பினரதும் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழளுக்கு நன்மைகள் ஏற்பட பணியாற்றுவதன் ஊடக நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு அணுகுமுறையாகும்.

இதன் ஊடக சமூகங்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்க வேண்டும் .

தங்களை சமூக பெறுப்புக்கு பங்களிக்கும் முதன்மையான நிறுவனமாக அடையாளப்படுத்தும் சம்பத் வங்கி சிங்கள குடியேற்றம் என்கிற வன்முறைக்கு துணை போய் அதன் சமூக பொறுப்பாக அடையாளப்படுத்தினால் அது மிக கீழ்தரமானது

இது போதாதென்று சம்பத் வங்கியின் Top 5 % பங்குதாரர்களில் ஒருவராக ஊழியர் சேமலாபா நிதியமும் (EPF) இருக்கின்றது .

இதையெல்லாம் எப்படி விளங்கி கொள்ள வேண்டும் என தெரியவில்லை . தங்களை இன்னமும் சிங்கள வங்கி சிங்களவர்களுக்கான வங்கி என நம்பி கொண்டு இருக்கின்றார்கள் போல இருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here