சற்றுமுன் வெளியானது 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தது.

இதில் 278,196 பாடசாலை மாணவர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதனால், விடைத்தாள் திருத்தும் செயற்பாடு பின்னடைவை சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நவம்பர் மாதம் நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சைக்கு இதுவரை 323,913 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நவம்பரில் நடைபெறவுள்ள பரீட்சைக்கான காரணங்களை முன்வைத்த கல்வி அமைச்சு, ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் உரிய நேரத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடத் தவறியமையே முன்னைய பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதத்திற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் மாணவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here