சாமிமலை ப உள்ள கவரவில்லை சிங்கள பாடசாலையில் ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்..!{படங்கள்}

இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கவரவில்லை சிங்கள பாடசாலையில் ஆசியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தேவை என கோரிக்கை முன் வைத்து சாமிமலை கவரவில்லை பிரதான வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 70 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட காரர்கள் அதிபர் தேவை ஆசிரியர் தேவை ஹட்டன் வலய பணிப்பாளர் தூக்கமா என கோஷம் எழுப்பினர்.

இந்த பாடசாலையில் 150 குரைவான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் எட்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆகையால் நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தேவை என கோரிக்கை முன் வைத்து பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Img 20240222 Wa0012 Img 20240222 Wa0011 Img 20240222 Wa0010 Img 20240222 Wa0009 Img 20240222 Wa0008 Img 20240222 Wa0006 Img 20240222 Wa0005 Img 20240222 Wa0004 Img 20240222 Wa0003