HomeAccident Newsசிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த கடற்படை பேருந்து

சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த கடற்படை பேருந்து

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி தானியகம பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு கடற்படை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தானியகம பிரதேசத்தில் கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சிகை அலங்கார நிலையம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் காயம் அடைந்தவர்களில் ஒருவர் கடற்படை தளத்திற்குச் சொந்தமான வைத்தியசாலையிலும், பலத்த காயங்களுக்கு உள்ளான கடற்படை உத்தியோகத்தரான என். எஸ். மதுஷங்க (39வயது) திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

இதேநேரம் சிகை அலங்கார நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த கடற்படை பேருந்து - Lanka News - Tamilwin News சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த கடற்படை பேருந்து - Lanka News - Tamilwin News சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த கடற்படை பேருந்து - Lanka News - Tamilwin News சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த கடற்படை பேருந்து - Lanka News - Tamilwin News சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த கடற்படை பேருந்து - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments