சிங்கள வைத்திய நிபுணர் ஒருவரின் திருவிளையாடல்!! காணி பிடித்த கதை போல..

அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டமென்றில், அந்த வைத்திய சாலையில் உள்ள endoscopy இயந்திரம் பழுது அடைந்து விட்டதால் , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட endoscopy மெசினை , முல்லைத்தீவிலிருந்து , அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

அப்போது ஒரு தமிழ் வைத்திய நிபுணர் அதற்க்கு ஆட்சேபம் தெரிவித்தார் .
அது அரசால் வழங்கப்பட்டது இல்லை . புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டது என !

அதற்க்கு ஒரு சிங்கள வைத்திய நிபுணர் … வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டால் அதற்க்கு தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது , அதுபற்றி சுகாதார அமைச்சே தீர்மானிக்க வேண்டும் என்றாராம் .

இந்த விடயத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து , முல்லைத்தீவு மாவட்ட அரசியல் தலைமைகளும் , சுகாதார திணைக்கள அதிகாரிகளும் , அவசர அவசியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இதுபற்றிய தங்களின் கரிசனையை வாஞ்ஞையோடு எதிர்பார்க்கிறேன் என மோகன் பரன் என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, முல்லைதீவு வைத்தியசாலையின் அகநோக்கி (Endoscopy) இயந்திரம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது அனுராதபுர வைத்தியசாலையில் பழுதடைந்துள்ள அகநோக்கி (Endoscopy) உபகரணத்திற்கு பதிலீடாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் தமிழர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அகநோக்கிக் கருவியினை கையளிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சு கோரவுள்ளதாக சமூக ஊடகங்களிலும் சில இணையத்தளங்களிலும் பரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என டி முல்லைத்தீவு (மாஞ்சோலை) வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சண்முகராசா அவர்களைத் தொடர்புகொண்டு வினவியபோது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் குழப்பமடையத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ள அவர் இதுவரை அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவரது தகவலின் படி முல்லைத்தீவு வைத்தியசாலையில் தற்போது இரண்டு அகநோக்கிக் கருவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று 2012 ஆம் ஆண்டு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்டது. அது தற்போது செயலிழந்துள்ளதால் அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது அகநோக்கிக் கருவியானது இலங்கை அரசின் நிதி ஊடாக பெறப்பட்டது. அது தற்போது பாவனையில் உள்ளது. புலம்பெயர் மக்களால் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அகநோக்கிக் கருவி எதுவும் நன்கொடையாக இதுவரை வழங்கப்படவில்லை. எனத் தெரிவித்த அவர் “மத்திய சுகாதார அமைச்சிடம் இருந்தோ அல்லது வேறு எவரிடம் இருந்தோ அனுராதபுர வைத்தியசாலைக்கு எமது அகநோக்கிக் கருவியைக் கையளிக்குமாறு கோரிக்கை விடப்படவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரியொருவரை தொடர்புகொண்டபோது “இது முற்றிலும் ஆதாரமற்ற தகவல்” எனத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here