சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்துவந்த பௌத்த பிக்கு மாட்டினார்

சமூக ஊடகங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்துவந்த பௌத்த பிக்கு ஒருவரை சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் சிறுமிகளின் நிர்வாண படங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ராகமையைச் சுற்றியுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய படங்களின் தொகுப்பை மொத்த விற்பனைக்கு வழங்கி வருவதுடன், கிரிப்டோகரன்சி மூலம் பணம் பெறுவதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதன்படி, சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசாரணை அதிகாரிகள் நேற்று ராகம பகுதிக்கு சென்றபோது, அப்பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இருந்து இந்த மோசடி இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது.

குறித்த விகாரையை சோதனை செய்ததில், அங்கிருந்த 19 வயதுடைய பிக்கு ஒருவரே குறித்த நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

சந்தேகநபர் பயன்படுத்திய கணினியில் 7 மாதங்கள் முதல் 18 வயது வரை உள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சிறுமிகளின் சுமார் 1500 நிர்வாணப் படங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் அவர்களில் 80 சதவீதம் பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பது தெரியவந்துள்ளது.

சிறுமிகளின் நிர்வாண காட்சிகளை சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு அப்ளிகேஷன்கள் மூலம் பிறரால் வெளியிடப்பட்டதை தான் விற்றதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சந்தேக நபரான பிக்கு, வீடியோக்களை விற்பனை செய்த பணத்தை அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதோடு, சிறு வணிகமாக கிராபிக்ஸ் காட்சிகளை தயாரித்து விற்பனை செய்து, அந்த பணத்தை வரவு வைப்பதாக வங்கிக் கணக்கின் உரிமையாளரிடம் கூறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here