யாழ் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்காக கொழும்பு சுகாதார அமைச்சின் 5 அதிகரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இன்று வருகை தரவுள்ளனர்.
தாதியர் சங்கம் கேட்டு கொண்டதற்கு அமைவாகவே இக்குழு வருகை தந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளது.
காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
சிறுமியின் கையில் போடப்பட்டுள்ள “கனூலா” மற்றும் அவருக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து செறிவூட்டப்படாமல் ஏற்றப்பட்டதாலேயே கை அகற்ற வேண்டி வந்ததாக பெற்றோர் குற்றம் சுமத்தி பொலிசில் முறைப்பாடு மேற்கொண்டு வழக்கு நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணையை நடத்துவதற்காக கொழும்பு சுகாதார அமைச்சை சேர்ந்த 5 சுகாதார அதிகாரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைக்கு இன்று வருகை தந்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுமி சாதாரண காய்ச்சலால் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரிற்கு ( MRSA POSITIVE ) தோல் சம்மந்தமான பாரிய தொற்று நோய் ஒன்றுடனே முன்னர் இரு வைத்தியசாலைகளில் வைத்து ஊசி மருந்து செலுத்தி இயலாத கட்டத்திலேயே யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
மேலும் சிறுமியை அனுமதிக்கும் போது சிறுமியின் கைகளை வைத்தியர் படம் எடுத்ததாகவும் அதில் இரு கைகளிலும் கனுலா காணப்பட்டதாகவும் சிறுமிக்கு பாரிய தோற்று என்பதாலேயே வீரியம் மிக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும் தனிமைப்படுத்தி வைத்ததாகவும் தெரியவருகின்றது.
சிறுமியின் உறவுகள் பணத்திற்கு குறைவானவர்கள் அல்ல என்றும் சுண்ணாகத்தில் பாரிய புடவைக்கடை ஒன்றும் உள்ளது எனவும் தெரியவருகின்றது.
மேலும் யாழ் போதனாவில் செலுத்தப்பட்ட ஊசி மருந்து குறித்த தனியார் வைத்தியசாலையிலேயும் கிடைக்கும் என்றும் அங்கு வைத்தே செலுத்தி இருக்க முடியும் என்றும் அவசர அவசரமாக மாற்றப்பட்டமைக்கு இதுவே காரணம் என்றும் தெரியவருகின்றது.
தனியார் வைத்தியசாலையின் தவறை மறைக்க யாழ் போதனா வைத்தியாசலை பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளதாக்கவும் தெரியவருகின்றது.
எது எவ்வாறாயினும் குற்றவாளிகள் தாண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.